வணக்கம், சைவ வைணவ சேனலுக்கு பக்தர்கள் அனைவரையும் பக்தியுடன் வரவேற்கிறோம்

Subscribe

சைவ சமயம்

  • சைவ சமயம், சிவநெறி என்றெல்லாம் அழைக்கப்படும் நெறி, சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும்.
  • இன்றைய இந்து மதம் என்று பொதுவாக அழைக்கப்படும் மதத்தின்கிளைநெறிகளில் ஒன்றாக அமைந்துவிளங்கும் சைவம், வைணவத்தைை பின்னால் தள்ளி இந்து சமயத்தின் பெரும்பான்மையான பின்பற்றுநர்களைக் கொண்ட சமயமாகக் காணப்படுகின்றது.
  • சைவ சமயத்தின் முழு முதற் கடவுளாக சிவபெருமான் விளங்குகிறார்.உமை,வினாயகர்,முருக கடவுள், பைரவர்,வீரபத்திரர்,நாகதம்பிரான்,ஐயனார் மற்றும் சிறு தெய்வ வழிபாட்டு தெய்வங்களும் சைவ சமயத்தவரின் வழிபாட்டு தெய்வங்களாக சைவர்களால் வழிபடப்படுகின்றன.

வைணவ சமயம்

  • விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும்.
  • உலகில் தீமைகள் ஓங்கும் போது விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை.
  • திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • பாஞ்சசன்யம் என்பது திருமாலுடைய சங்கின் பெயராகும். இந்த சங்கானது கடலில் கிடைக்கும் வலம்புரி சங்கின் வகையைச் சார்ந்தாக கருதப்பெறுகிறது


  • பரிகார ஸ்தலங்கள்